சென்னை மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு விரைந்து மேற்கொள்ளுமா?

 
ttv dhinakaran ttv dhinakaran

சென்னை மழைநீர் வடிகால் பணிகளை தி.மு.க அரசு விரைந்து மேற்கொள்ளுமா? என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

TTV

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணிகள் ஆமைவேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பல இடங்களில் இதற்காக தோண்டப்பட்டுள்ள கால்வாய்கள், பாதுகாப்பு தடுப்புகள் எதுவும் இன்றி அப்படியே திறந்த நிலையில் உள்ளன. செப்டம்பர் மாதத்திற்குள் 80% பணிகள் முடிந்துவிடும் என்று சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் கூறியிருந்தாலும்  அதற்கான வேகத்தில் வேலைகள் நடைபெறுவதாக தெரியவில்லை. 

tn

இப்போதே மழை அடிக்கடி பெய்வதால், பள்ளம் எது? சாலை எது? என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே 100% பணிகளையும் முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்து உரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளோடு சென்னை மழைநீர் வடிகால் பணிகளை தி.மு.க அரசு விரைந்து மேற்கொள்ளுமா !?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.