வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் - லஞ்ச ஒழிப்புத் துறை மௌனம் காப்பது ஏன்?

 
TTV STALIN

வாக்கி டாக்கி வாங்கியதில்  ஊழல் நடந்துள்ள நிலையில்  லஞ்ச ஒழிப்புத் துறை ஓராண்டுக்கு மேலாக மௌனம் காப்பது ஏன்? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

வாக்கி டாக்கி முறைகேடு : போலீசார் வீடுகளில்  லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை!

கடந்த  அதிமுக ஆட்சியில் தமிழகக் காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ரூ.  83.45 கோடிக்கு  மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது அம்பலமானது. இதுகுறித்து  சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் வாக்கி டாக்கி வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த 2016 ஆம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிய போலீசாருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தியதுடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

tn
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன்  தனது ட்விட்டர் பக்கத்தில், "பழனிசாமி கம்பெனியின் ஆட்சியில் மீன்வளத்துறை சார்பாக மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து தி.மு.க அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ஓராண்டுக்கு மேலாக மௌனம் காப்பது ஏன்? இது தொடர்பாக புகார் அளித்தவர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டிய பிறகும் லஞ்ச ஒழிப்புத்துறை மழுப்பலான பதிலை தெரிவித்திருப்பது ஏன் அப்படியென்றால் தி.மு.க.வும் முதலமைச்சர் திரு.ஸ்டாலினும் தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றதான் ஊழல் ஒழிப்பு வேஷம் கட்டி வந்தார்களோ? என்று பதிவிட்டுள்ளார்.