தமிழ்நாட்டு மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் - தினகரன் விமர்சனம்!!

 
ttv dhinakaran

தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று தினகரன் விமர்சித்துள்ளார். 

stalin

தமிழகத்தில்  சொத்து வரி திடீரென்று  உயர்த்தப்பட்டது.  சென்னை மாநகராட்சியில்  600 சதுரஅடி முதல் 1200 சதுரஅடி வரை 75 % சொத்து வரியும்,  600 சதுரஅடிக்கு  ரூ.1215 ஆகவும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. 1201 சதுரஅடி முதல் 1800 சதுரஅடி வரை 100% வரி உயர்வும், 1801 சதுரஅடிக்கு மேலாக உள்ள வீடுகளுக்கு 150%சொத்து வரி உயர்வும் ,  வணிக வளாகங்களுக்கு 150% வரி உயர்வும், கல்வி நிலையங்களுக்கு 100% வரி உயர்வும் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையிலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டதாக அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்த போதிலும், இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சொத்துவரி உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


 

tn
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக சொத்து வரியை மனசாட்சி இல்லாமல் 150% வரை உயர்த்திய தி.மு.க அரசு, தற்போது ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவதற்கு சட்டம் கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.  ஸ்டாலின் அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றிருப்பதைக் கொண்டாடும் விதமாக இதுபோன்ற தண்டனைகளை பரிசாக மக்களுக்கு கொடுத்திருக்கிறார்களோ?எஞ்சிய 4 ஆண்டுகளில் இன்னும் என்னென்ன தண்டனைகளை பரிசுகளாக வாக்களித்த மக்களுக்கு வாரி வழங்கப்போகிறார்களோ?! தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.