கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு தினகரன், வானதி சீனிவாசன் வாழ்த்து

 
hn

கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு தினகரன், வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

tn

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைதள பக்கத்தில், செஸ் போட்டியின் உயரிய பட்டமான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற தமிழ்நாட்டின் முதல் செஸ் வீராங்கனை என்ற சாதனையை படைத்திருக்கும் வைஷாலி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


கடுமையான உழைப்பு மற்றும் விடா முயற்சியின் மூலம் இந்தியாவின் 84 வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றிருக்கும் வைஷாலி அவர்கள், அடுத்தடுத்து நடைபெறும் உலகளவிலான போட்டிகளில் பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்கவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார். 


அதேபோல் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ள செல்வி. @chessvaishali வாழ்த்துக்கள்..!  இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் என்ற உயரிய அந்தஸ்தை பெற்றுள்ள செல்வி.வைஸாலிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்லும் முதல் தமிழ் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். என்று தனது சமூகவலைத்தள பதிவிட்டுள்ளார்.