தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் அமையும் - டிடிவி தினகரன்..!!
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அமையும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அதிமுக - பாஜக ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. இருப்பினும் மத்திய அமைச்சர் அமித்ஷா கூட்டணி ஆட்சி அமையும் என கூறியது, ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்னும் ஏமாளிகள் இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறி வருவதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற நோக்கில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தேசிய ஜனநாய கூட்டனி நிச்சயம் ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் கூட்டு அமைச்சரவைதான் இருக்கும். ஆட்சி அதிகாரத்தில் அனைத்து கட்சிகளும் பங்குபெறும்.
மத்தியில் பாஜக தனிப்பெரும்பாண்மை பெற்றிருந்தும் கூட்டணி ஆட்சி தான் அமைந்தது. அதுபோல தமிழ்நாட்டிலும் அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதன் அமையும். திமுகவை வீழ்த்த கூட்டணியை பலப்படுத்தி வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா அதைத்தான் திரும்பச் திரும்பச் சொல்லி வருகிறார். முதல்வர் யார் என்பதை அமித்ஷாவிடம் கேட்பது தான் சரியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.


