ரிஷி சுனக்கிற்கு டிடிவி தினகரன் வாழ்த்து!!

 
ttv

பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் ரிஷி சுனக்கிற்கு தினகரன்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

Rishi Sunak -   ரிஷி சுனக்

இங்கிலாந்து பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்த நிலையில் இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளி ரிஷி சுனக் தேர்வாகியுள்ளார்.  இரண்டு தலைமுறைகளுக்கு  முன்பே ரிஷி சுனக்கின் குடும்பம்  இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த நிலையில் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் தான் ரிஷி பிறந்தார். இங்கிலாந்து  ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயில்வதையே வழக்கமாகக் பயின்ற ரிஷி, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தார். அப்போது தன்னுடன் பயின்ற சக மாணவியும், இந்தியாவின் புகழ்பெற்ற பிசினஸ்மேன் 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தியின் மகளுமாகிய அக்‌ஷதாவை காதலித்து, கடந்த   2009-ம் ஆண்டு பெங்களூருவில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கிருஷ்ணா, அனோஷ்கா என இரண்டு குழந்தைகள்  உள்ளனர். 

ttn

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டர் பக்கத்தில், "பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரு.ரிஷி சுனக் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு காலத்தில் உலகைக் கட்டி ஆண்ட நாடு, தற்போது நெருக்கடியைச் சந்திக்கும் நேரத்தில் அதன் பிரதமராகி இருக்கும் திரு.ரிஷி சாதனைகள் புரிந்து நம் அனைவருக்கும் பெருமை தேடித்தரட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.