செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் - குகேஷுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து !!

 
ttv

சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள குகேஷுக்கு டிடிவி  தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

tn

தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் என்ற 15 வயது சிறுவன் ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.  13 நாடுகளில் இருந்து 183 வீரர்கள் பங்கேற்ற செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ்  9 சுற்றுகளாக நடத்தப்பட்ட செஸ்  போட்டியில், பங்கேற்று 7 வெற்றி, இரண்டு டிரா என மொத்தம் 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். சர்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள 15 வயதான குகேஷ்-க்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   அதேபோல் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மூன்றாவது இடம் பிடித்த நிலையில் அவருக்கும் முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார்.

tn

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற லா ரோடா சர்வதேச ஓப்பன் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னையைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் P.குகேஷுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இதே தொடரில் மூன்றாம் இடம் பிடித்துள்ள இளம் செஸ் வீரரான R.பிரக்யானந்தாவுக்கும் எனது வாழ்த்துகள். சதுரங்கத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழும் இவர்கள் இருவரும் மேலும் பல சாதனைகள் புரிந்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.