நடிகர் விஜய் குறித்து டிடிவி தினகரன் 'பகீர்' கணிப்பு; திமுகவுக்குப் பெரும் பின்னடைவா?

 
ttv dhinakaran

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவர் முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்  அரசியலுக்கு வந்தபோது ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அந்தத் தாக்கம் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அதேபோன்ற ஒரு தாக்கத்தை வரும் தேர்தலில் நடிகர் விஜய் ஏற்படுத்துவார்” எனத் தெரிவித்தார்.

மேலும், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஏற்படுத்தும் இந்தத் தாக்கம் இம்முறை ஆளும் திமுகவிற்குப் பெரும் பின்னடைவை மற்றும் பாதிப்பைத் தரும் என்று தினகரன் குறிப்பிட்டார். இந்தச் சூழல் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாமல் இருக்க உதவுவதோடு, இறுதியில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணிக்குச் சாதகமான களத்தை அமைத்துக் கொடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கும் என்றும் அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஏற்கனவே மக்கள் திமுக ஆட்சியில் குமுறிக் கொண்டுள்ளார்கள்.ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே விஜய் அரசியல், என எல்லாமே இத்தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறினார். மேலும் குற்ற வழக்குகள் உள்ளவர்கள் பயத்தால் சேர்ந்த கூட்டணி என முதல்வர் விமர்சனம் குறித்த கேள்விக்கு,அக்யூஸ்ட் என்பதற்கும் குற்றவாளி என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் முதல்வர் பேசிக்கொண்டுள்ளார்.ஊழல் லஞ்சம் திமுக ஆட்சியில் அதிகமாக நடைபெற்றுள்ளது.திராவிட மாடல் சீட்டிங் மாடல் என மாறிக்கொண்டுள்ளது. முதல்வர் தோல்வி பயத்தில் உள்ளார். எதேதோ பேசிக்கொண்டுள்ளார்.

 அண்ணாமலை போட்டியிடாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி, தேர்தலில் போட்டியிடாதது அண்ணாமலையின் தனிப்பட்ட முடிவு.இதில் அழுத்தம் ஏதும் இருக்கும் என நினைக்கவில்லை. அண்ணாமலை குறித்து யூகங்கள் வதந்திகள் பெரிதாக்கப்படுகிறது.அது பொய் என்றார்.

இன்றைக்கு அண்ணாமலை தான் கண்டன்ட்டா. நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. பெண்குழந்தைகள் சீரழிக்கப்படுகிறார்கள். சட்டம் ஒழுங்கு மோசமாகி உள்ளது.நான் தேர்தலில் நிற்கவில்லை என்பதால் தொண்டர்கள் வருத்தப்பட்டார்கள். இருந்தாலும் என் முடிவு. தொண்டர்கள் ஏற்றுக்கொண்டார்கள். தேர்தலுக்கு பிறகு கூட்டணியில் அமைச்சர்கள் வாய்ப்பு குறித்த கேள்விக்கு,அதிமுக ஆட்சி வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதிமுக தலைமையில் ஆட்சி வர வேண்டும் எங்கள் விருப்பம். தேசிய ஜனநாயக கூட்டணியில் நீங்கள் கூறுவது வர வேண்டும் என விரும்புவது இயற்கை. தேர்தலுக்கு பிறகு சுமூகமாக எல்லாம் மாறும் என்று கூறினார்.