சென்னை மக்களுக்கு உதவ வேண்டும் - கட்சியினருக்கு டிடிவி தினகரன் அறிவுறுத்தல்

 
ttv

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவ வேண்டும் என அமமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சூழ்ந்திருக்கும் மழைநீர் - இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு உதவ கழகத்தினருக்கு அன்பான வேண்டுகோள். ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதும் முடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வட தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பெய்துவரும் கனமழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதோடு, பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களுக்கு தங்களால் இயன்ற அத்தியாவசிய உதவிகளை செய்துத் தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.