‘அன்பிற்கினிய இஸ்லாமிய பெருமக்களுக்கு’ - மிலாது நபி வாழ்த்து சொன்ன டிடிவி தினகரன்..

 
ttv

 அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த மிலாது நபி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.  

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த மிலாது நபி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உலகின் ஆகப்பெரிய சக்தியான அன்பு இருந்தால் மட்டுமே நம்மால் பிறருக்கு உதவ முடியும் என்பதில் உறுதியாக இருந்து, அதன்படியே வாழ்ந்து காட்டிய அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த அன்பு, அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை பின்பற்றி வாழ்ந்திட நாம் அனைவரும் உறுதியேற்போம். 

ramzan

எத்தகைய இடையூறுகள் ஏற்பட்டாலும் அவற்றை அன்பால் எதிர்கொண்டு, உண்மையின் வடிவமாக திகழ்ந்த அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் நாடு முழுவதும் அமைதி நிலவட்டும், சகோதரத்துவம் தழைத்தோங்கட்டும் எனக்கூறி இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மிலாது நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.