தமிழ்நாடு நாளை தமிழர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் - டிடிவி தினகரன்

 
TTV TTV

தமிழ்நாடு உருவான இந்த நந்நாளை தமிழக மக்கள் ஒவ்வொருவரும் கொண்டாடி மகிழ வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். 


இந்தியாவில் இருந்து தமிழ்நாடு மொழிவாரியாக பிரிக்கப்பட்ட தினம் நவம்பர் 01. இந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தனி மாநிலமாக அமைய போராடிய தியாகிகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழ்நாடு நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1956 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழ் மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்டிருந்த தமிழ்நாடு உருவான தினம் இன்று.


தமிழக மக்கள் ஒவ்வொருவரும் கொண்டாடி மகிழ வேண்டிய தமிழ்நாடு உருவான இந்நாளில், மக்கள் நலனையும், மாநிலத்தின் உரிமைகளையும் எந்தவித சமரசமுமின்றி நிலைநாட்ட நாம் அனைவரும் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.