திமுகவையும், சுயநலமிக்க துரோக கூட்டத்தையும் ஒருசேர வீழ்த்துவோம் - டிடிவி தினகரன்
மக்கள் விரோத திமுகவையும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்தையும் ஒருசேர வீழ்த்தி வெற்றி முத்திரையை பதித்திட நாம் அனைவரும் அம்மா நினைவு நாளில் உறுதியேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் என் லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும் வளமான வாழ்வுமே என்னுடைய இலக்கு எனக்கூறி தன் வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காகவே அர்ப்பணித்த இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவு தினம் இன்று.
தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் என் லட்சியம்; தமிழக மக்களின் வளர்ச்சியும் வளமான வாழ்வுமே என்னுடைய இலக்கு எனக்கூறி தன் வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காகவே அர்ப்பணித்த இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவு தினம் இன்று.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 5, 2024
தமிழக அரசியல் வரலாற்றில் தனிப்பெரும்…
தமிழக அரசியல் வரலாற்றில் தனிப்பெரும் அத்தியாயமாக திகழ்ந்த இதயதெய்வம் அம்மா அவர்களின் வழித்தடத்தை பின்பற்றி அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுகவையும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்தையும் ஒருசேர வீழ்த்தி வெற்றி முத்திரையை பதித்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.


