இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள் - டிடிவி தினகரன்

 
ttv

ஈகை திருநாளாம் ரமலான் பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து ஏழை, எளிய மக்களின் ஏழ்மையை போக்கிட சிறப்புத் தொழுகைகள் செய்து இறைவனை வழிபட்ட இஸ்லாமிய சகோதர, சகோதரர்களின் எண்ணங்கள் அனைத்தும் இந்த ரமலான் பெருநாளில் ஈடேறட்டும். 

மனித குலத்திற்கு வழிகாட்டியாக திகழும் அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் வழியில் அன்பு, கருணை, ஈகை, மனிதநேயம், ஒற்றுமை உணர்வு, மற்றும் சகோதரத்துவத்தை பேணிகாப்பதோடு உலகமெங்கும் அமைதியும் சமாதானமும் தழைத்திட நாம் அனைவரும் உறுதியேற்போம் எனக்கூறி இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது புனித ரமலான் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.