மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைவர் VKT பாலன் மறைவு - டிடிவி தினகரன் இரங்கல்
மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைவர் VKT பாலன் மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைவர் VKT பாலன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் விகேடி பாலன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத் துறையின் முன்னோடியாக திகழ்ந்த மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு.VKT பாலன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 12, 2024
இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய திரு.VKT பாலன் அவர்களை இழந்துவாடும்… pic.twitter.com/QrXVV1Pzmo
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சுற்றுலாத் துறையின் முன்னோடியாக திகழ்ந்த மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு.VKT பாலன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய திரு.VKT பாலன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.