தந்தை பெரியாரையும் அவரது சிந்தனைகளையும் எந்நாளும் நினைவில் கொள்வோம் - டிடிவி தினகரன்

 
TTV Dhinakaran

தந்தை பெரியாரின் 50வது நினைவு தினத்தையொட்டி அவருக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். 

தந்தை பெரியார் ஈரோடு வெங்கடநாயக்கர் - சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு 17.09.1879ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். சாதியப் பாகுபாட்டினைக் கண்டு வெகுண்டெழுந்து சமூக நீதி காத்திடத் தொடர்ந்து போராடியவர் தந்தை பெரியார் அவர்கள். மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு, சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து போராடினார். இன்று அவரது 50வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் மலரும் பெரியாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். 


இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், கல்வி அறிவு, சுயமரியாதை எண்ணம், பகுத்தறிவு ஆகிய தன்மைகள் மட்டுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் என்றுரைத்து தன் வாழ்நாள் முழுவதும் சுயமரியாதைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவுதினம் இன்று. சமூகநீதி, பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, சமதர்ம சமத்துவ சிந்தனை, என தான் கொண்ட கொள்கைகளில் இறுதிவரை உறுதியாக இருந்ததோடு, தமிழர்களின் அடையாளத்தையும், சுயமரியாதையும் மீட்டெடுத்த தந்தை பெரியாரையும் அவரது சிந்தனைகளையும் எந்நாளும் நினைவில் கொள்வோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.