மாற்று திறனாளிகளுக்கு அனைத்திலும் சம வாய்ப்பு வழங்குவோம் - டிடிவி தினகரன்

 
TTV

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”சாதிப்பதற்கு மாற்றுத்திறன் தடையல்ல” என்ற தன்னம்பிக்கை வரிகளுக்கு ஏற்ப, தடைகளை தகர்த்தெறிந்து ஒவ்வொரு துறைகளையும் தனக்கான துறைகளாக மாற்றிக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


உரிமைகளை பேசும் தினமாக நின்றுவிடாமல், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் சம வாய்ப்பு வழங்கி, ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழ எளிதில் அணுகக்கூடிய சமமான உலகத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.