ஆசிய விளையாட்டு போட்டியில் 100 பதக்கங்களை வென்ற இந்தியா - டிடிவி தினகரன் வாழ்த்து

 
TTV

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் முதன்முறையாக 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய அணியைச் சேர்ந்த வீரர், வீரங்கனைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாக டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில், 25 தங்கம், 35வெள்ளி, 40 வெண்கலம் என பங்கேற்ற அனைத்து விளையாட்டு பிரிவுகளும் வெற்றிகளை குவித்திருக்கும் இந்திய அணி, பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் நீடித்து வருகிறது. சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளுக்கு பிறகு 100 பதக்கங்களை வென்ற அணிகள் பட்டியலில் 4 வது நாடாக இந்தியா இணைந்திருப்பதும், அதில் தமிழ்நாட்டு வீரர்களின் பங்களிப்பு இருப்பதும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.


அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகளைக்குவித்திருக்கும் இந்திய அணியினர், எஞ்சிய போட்டிகளிலும் பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்த்திட எனது வாழ்த்துகளைத்தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.