பதவிக்காக பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கும்- டிடிவி தினகரன்
2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுக இருந்த இடம் தெரியாமல் போகும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “திமுகவினர் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள ராஜ தந்திரம் என்ற பெயரில் பாஜகவுடன் கூட கூட்டணி வைப்பார்கள். மத்தியில் மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. பதவியை காப்பாற்றிக்கொள்ள திமுக எதற்கும் தயாராகும். சசிகலாவின் சுற்றுப்பயணம் எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை எடுபடாது. 2026-க்கு பின் அதிமுக கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். அதிமுகவிடம் இரட்டை இலை சின்னம் இருப்பதால் தொண்டர்கள் சகித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என எல்லோரும் முயற்சி செய்வது இயற்கை. இதற்கு எடப்பாடி பழனிசாமி தடையாக இருக்கும் வரை எந்த முயற்சியும் பலிக்காது” என்றார்.