விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைய இருக்கிறது- டிடிவி தினகரன்

 
ச் ச்

விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைய இருக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டிதான் இருக்கும், நான் 5வது அணி அமைப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை. கூட்டணி குறித்து சில கட்சிகள் என்னுடன் பேசி வருகின்றன.  2026 தேர்தலில் அம‌முக யாருடன் கூட்டணி என இதுவரை முடிவு செய்யவில்லை. விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைய இருக்கிறது. விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம். அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என டெல்லி பாஜகவினர் கூறுவதில் எந்த தவறும் இல்லை. டெல்லியில் இருப்பவர்கள் அதிகாரத்தை வைத்து மிரட்டுவதாக நான் நினைக்கவில்லை. அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என டெல்லி பாஜகவினர் மத்தியஸ்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை” என்றார்.