"அமமுக எம்எல்ஏ காமராஜை காணவில்லை; தவெகவினர் தூக்கிவிட்டனர்"- டிடிவி தினகரன் பரபரப்பு புகார்

 
ழ்

எங்கள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.


எங்கள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது போனை பிடுங்கி வைத்துக் கொண்டு அவரை பிடித்து வைத்திருக்கலாம். ஆனால் எங்களது கட்சியின் கடிதத்தை போலியாக தயாரித்து விஜய்க்கு ஆதரவாக கொடுத்திருக்கிறார்கள். இதில் விஜய் தான் ஈடுபட்டிருக்கிறார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அமமுக எம்.எல்.ஏ காமராஜ் விலை போயிருக்கலாம். முதல் நாளிலே இப்படி செய்துவிட்டு விஜய் எப்படி தன்னை தூயசக்தி என கூறிக்கொள்ளலாம். இராவணன் சீதையை தூக்கியதுபோல், எனது எம்.எல்.ஏ.வை தூக்கி இருக்கிறார்கள் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.