பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி- டிடிவி தினகரன்
எனது பிறந்தநாளில் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது பிறந்தநாளில் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சரும் அன்புச் சகோதரருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள், முன்னாள் அமைச்சரும் அன்புச் சகோதரருமான திரு.வைத்திலிங்கம் அவர்கள், திரைப்பட நடிகர் தளபதி விஜய் அவர்கள், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புத் தம்பி திரு.ரவீந்திரநாத் அவர்கள், தமிழ்நாடு ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் D.கணேசன்,பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் ஆகியோர்களுக்கும் மற்றும் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாம் என் பாசத்திற்குரிய கழக நிர்வாகிகளுக்கும், என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.