அரசியலில் திருப்பம் : தி.மு.க., கவுன்சிலர் பா.ஜ.க-வில் ஐக்கியம்..!
ராமேஸ்வரம் கெந்தமாதன பர்வதம் பகுதியைச் சேர்ந்த சங்கர் 2005ல் தி.மு.க., சார்பில் நகராட்சி வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின் 2022ல் மீண்டும் நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட தி.மு.க., சீட் கொடுக்காததால், நகராட்சி 8வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின் மீண்டும் தி.மு.க.,வில் இணைந்து, தற்போது தி.மு.க., நகர் பொருளாளராக உள்ளார்.
இந்நிலையில் தி.மு.க.,வின் ஹிந்து விரோதம் மற்றும் ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று முன்தினம் பா.ஜ.,வினர் நடத்திய பொதுக்கூட்ட மேடையில் அக்கட்சியில் இருந்து சங்கர் விலகி, மாவட்ட தலைவர் முரளிதரன் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.
பின் கவுன்சிலர் சங்கர் பேசியதாவது : தி.மு.க., அரசு தொடர்ந்து ஹிந்து விரோத போக்கை கடைபிடிக்கிறது. உயர்நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காமல், ஹிந்துக்களின் மனதை புண்படுத்தி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாதது கண்டனத்திற்குரியது என்றார்..


