தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- அரசுக்கு அதிரடி உத்தரவு

 
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Image

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்த குற்ற பத்திரிகையை, மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்திருந்ததால், தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக கூறினார். இதனையடுத்து, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.