தவெக ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த விஜய் உத்தரவு!
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டத்தை பிப்ரவரி இறுதிக்குள் நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்த பொதுச் செயலாளர் என்.ஆனந்த், அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கட்சி தொடங்கி ஒரு ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதை நிகழ்ச்சியாக (ஆண்டு விழா) நடத்தவும், அதனுடன் பொதுக்குழுவையும் நடத்தி முடிக்க விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதை நந்தனம் YMCA மைதானத்தில் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அதன் நிர்வாகத்தினர் காவல்துறை அனுமதி மற்றும் என்.ஓ.சி முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று அனுமதி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆண்டு விழா மற்றும் கட்சியின் பொதுக்குழுவை வேறு இடத்தில் நடத்துவதற்கான பணிகளில் மூவரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பிப்ரவரி மாதத்திற்குள் பொதுக்குழு மற்றும் ஆண்டுவிழா நடைபெறவுள்ளது.


