விஜய் வீட்டுக்கு வருமானவரித்துறை ரெய்டு வந்த சம்பவத்தில் நான் சம்பந்தப்பட்டிருந்தேனா?- அருண்ராஜ் பரபரப்பு விளக்கம்

 
அருண்ராஜ் அருண்ராஜ்

தவெக கட்சி மிகவும் கொள்கை பிடிப்புடன் உள்ள கட்சி இந்தக் கொள்கை பிடிப்புடன் தமிழ்நாட்டிற்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவோம் என தவெக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ராஜ் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி கூறியுள்ளார்.

Image

இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்த வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “எங்களது கட்சி மிகவும் கொள்கை பிடிப்புடன் உள்ள கட்சி. இந்தக் கொள்கை பிடிப்புடன் தமிழ்நாட்டிற்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவோம். நீண்ட நாளாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற யோசனை இருந்ததால் இன்னும் 15 ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும் சூழலிலும் நான் எனது முழு விருப்பத்துடன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தேன். மேலும் பொறுப்பு கொடுத்த உடனேயே தலைவர் விஜய் சிறப்பாக செயல்படுங்கள் என ஊக்கப்படுத்தினார். 2020 ஆம் ஆண்டு நடிகர் விஜய் வீட்டுக்கு வருமானவரித்துறை ரெய்டு வந்த சம்பவத்தில் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்பதில் உண்மையில்லை” என்றார்.