“அரசு அனைத்து மாவட்ட செயலாளர்களையும் மிரட்டி வருகிறது”- அருண்ராஜ்

 
s s

கரூரில் நடந்த விஜய் கூட்டத்தில் 41 பேர் பலியான நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் எண்டிடிவிக்கு பேட்டியளித்துள்ளார்.

Image

அதில், “பரப்புரையில் உயிரிழப்பு செய்தி முதலில் எங்களுக்கு கிடைத்தபோது, நாங்கள் நம்ப முடியாத அதிர்ச்சியில் இருந்தோம். செய்தி உறுதியானதும், எங்கள் தலைவர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் இருக்க அந்த இடத்திற்கு செல்ல விரும்பினார், ஆனால் மாநில அதிகாரிகளிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. குழப்பமான சூழ்நிலை ஏற்படுவதைத் தவிர்க்க, கனத்த இதயத்துடன் அங்கிருந்து வெளியேறினோம். இரண்டாம் நிலை தலைவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முயன்றபோதும், சரியான பதில் கிடைக்கவில்லை. நான் தனிப்பட்ட முறையில் மாவட்ட ஆட்சியரை அழைத்தேன், ஆனால் எந்த பதிலும் இல்லை. அரசு அனைத்து மாவட்ட செயலாளர்களையும் மிரட்டி வருகிறது, மேலும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அழைப்புகள் வந்துள்ளன. இதுதான் இப்போதைய நிலைமை." எனக் கூறியுள்ளார்.