சென்னையில் நிற்கப்போகும் TVK வேட்பாளர்கள்! முழு லிஸ்ட் இதோ..!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி உள்ளது. அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் மற்றவர்களுக்கு போட்டியாக வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். தமிழக வெற்றி கழகம் சார்பிலும் சில வாக்குறுதிகளை நேற்று வேலூரில் பேசிய விஜய் வெளியிட்டார். இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், விஜய் எங்கு நிற்கப்போகிறார். தவெகவில் இருக்கும் முக்கிய தலைகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக கூட விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப்போகிறார் என்ற தகவல் வெளியானது. இந்த தகவல் உறுதியானது என்றும் பலரும் பேசி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையின் 16 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார் யார் என்ற உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
சென்னையில் கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.கா.நகர் (SC), எழும்பூர் (SC), ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி, மதுரவாயல், மற்றும் அம்பத்தூர் ஆகிய 16 தொகுதிகள் உள்ளன.
சென்னையில் மொத்தமாக 28.30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 2.22 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
சென்னையின் 16 தொகுதியில் நிற்கும் தவெக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்
1) தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என கூறப்படுகிறது.
2) புஸ்ஸி ஆனந்த் தியாகராய நகர் (T Nagar) தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என கூறப்படுகிறது.
3) ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என கூறப்படுகிறது.
4) சிடிஆர் நிர்மல் குமார் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என கூறப்படுகிறது.
5) ஸ்ரீநாத் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என கூறப்படுகிறது.
6) விஷ்ணு வேளச்சேரி தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என கூறப்படுகிறது.
7) பாலமுருகன் அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என கூறப்படுகிறது.
8) பாலாஜி கொளத்தூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என கூறப்படுகிறது.
9) மரியா வில்சன் திருவெற்றியூர் போட்டியிட இருக்கிறார் என கூறப்படுகிறது.
10) ராஜ்மோகன் எழும்பூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என கூறப்படுகிறது.
11) வெங்கட்ராமன் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என கூறப்படுகிறது.
12) விஜயகுமார் அல்லது அசோக் துறைமுகம் தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என கூறப்படுகிறது.
13) தினகரன் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என கூறப்படுகிறது.
14) ஜேசிடி பிரபாகர் அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என கூறப்படுகிறது.
15) ஈசிஆர் சரவணன் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என கூறப்படுகிறது.
16) விஎஸ் பாபு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என கூறப்படுகிறது.

