தவெக மாநாடு- தொண்டர்களுக்கு சிற்றுண்டி விநியோகம்
தவெக மாநாட்டிற்கு வந்துள்ள தொண்டர்களுக்கு பிஸ்கட் மிக்சர் தண்ணீர் பாட்டில் உடன் கூடிய சிற்றுண்டி பைகள் வழங்கப்பட்டு வருகிறது. காலையிலிருந்து லட்சக்கணக்கான மாநாட்டு பந்தலில் குவிந்து உள்ள நிலையில் சமாளிக்க முன்கூட்டியே செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளின் படி சிற்றுண்டி பைகள் வழங்கினர்
தவெக மாநாட்டு அரங்கில் தொண்டர்களுக்கு சிற்றுண்டிகள் விநியோகம் வெயிலின் தாக்கத்தால் நாற்காலிகளை தலையில் வைத்துக் அமர்ந்திருந்த தொண்டர்களுக்கு சிற்றுண்டி விநியோகிக்கப்பட்டுவருகிறது. மயங்கி விழுந்த தொண்டர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. சில தொண்டர்கள் ஆம்புலன்கள் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருகின்றன. தண்ணீர், உணவு வழங்கப்படும் என தொண்டர்களை பொதுச்செயலாளர் ஆனந்த் சமாதானம் செய்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பே த.வெ.க மாநாட்டுக்கு வரவிருக்கும் தொண்டர்களுக்கு கொடுக்க, தண்ணீர் பாட்டிலுடன் சிற்றுண்டி கிட் விறுவிறுப்பாக தயாராகிவருகிறது. மொத்தம் 8.5 லட்சம் சிற்றுண்டி பாக்கெட்டுகள் தயாராகி இருந்தது குறிப்பிடதக்கது.


