த.வெ.க முதலாம் ஆண்டு விழா - பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி!
தமிழக வெற்றி கழகத்தின் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அரங்கினுள் அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராஜ விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது கட்சியின் கட்டமைப்புகளை சரிசெய்து வருகிறார். அதற்காக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், வியூக வகுப்பாளர்களை நியமித்து வருகிறார். இதன் காரணமாக பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் பரபரப்புடன் காணப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 70 ஆயிரம் பூத் கமிட்டி செயலாளர்களை நியமனம் செய்ய அக்கட்சி உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அரங்கினுள் அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தவெக முதலாம் ஆண்டு விழா இன்னும் சிறிது நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், நிகழ்ச்சியில் பாஸ் உள்ளவர்களுக்கு
மட்டுமே அரங்கினுள் அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது.


