தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் தொடங்கியது. தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட 2,000 பேர் பங்கேற்றுள்ளனர். இருமொழிக்கொள்கை, டாஸ்மாக் முறைகேடு, தொகுதி மறுவரையறை, பரந்தூர் விமான நிலையம், சாதிவாரிக் கணக்கெடுப்பு போன்றவை உட்பட 17 தீர்மானங்கள் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூத் கமிட்டி மாநாடு, விஜயின் சுற்றுப்பயண தேதி குறித்தும் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பொதுக்குழு நடைபெற்ற கூட்டத்தில் கடந்த ஓராண்டாக தவெக சார்பில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் பணி, போராட்டங்கள் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.