தமிழக அரசியல் கட்சி வரலாற்றிலேயே முதல்முறை! அசத்திய தவெக
தமிழக அரசியல் கட்சிகள் வரலாற்றிலேயே முதல்முறையாக தவெக நிர்வாகிகளுக்கு QR குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை பல்வேறு கட்டங்களாக சுமார் 3 லட்சம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முதல்கட்டமாக தற்போது 106 கழக மாவட்டங்களுக்குட்பட்ட 214 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஆயிரத்து 280 நகர/ஒன்றிய/ பேரூர் கழகங்கள் மற்றும் அதைசார்ந்த 21 ஆயிரத்து 134 கிளை மற்றும் வார்டு கழகங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள் 1 லட்சத்து 2 ஆயிரத்து 103 பேருக்கு QR குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அறிவுறுத்தலின் பேரில் அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் வரலாற்றிலேயே கழக நிர்வாகிகளுக்கு முதன்முறையாக QR குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கிய முதல் கட்சி தமிழக வெற்றிக் கழகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


