பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைப்பிடிப்பேன் - விஜய் உறுதிமொழி!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.
தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய:
— TVK Vijay (@tvkvijayhq) March 8, 2024
1) WhatsApp users - https://t.co/iw2ulVFXhG
2) TelegramApp users - https://t.co/YgMBgSnPWh
3) WebApp users - https://t.co/fqlptErSI5
4) Send WhatsApp message as 'TVK' to 09444-00-5555 pic.twitter.com/IPgiwx8mMB
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.