நோன்பு திறந்தார் தவெக தலைவர் விஜய்
மாமல்லபுரத்தில் ரமலான் திருநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நோன்பு திறந்தார் தவெக தலைவர் விஜய்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் த.வெ.க. சார்பில் ரமலான் திருநாளை முன்னிட்டு ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பெற்றது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து டி.வி.கே. கட்சியை சேர்ந்த இசுலாமியர்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு 1000 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. குறிப்பாக இசுலாமி பெண்கள் புர்கா உடை அணிந்து வந்திருந்தனர். குறிப்பாக சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த அமீது மீரான் என்ற தவெக தொண்டர் தன் குடும்பத்துடன் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
தலைவர் தளபதி விஜய் இஸ்லாமிய நண்பர்களுடன் இணைந்து தொழுகையில் பங்கேற்றார்.@TVKVijayHQ pic.twitter.com/VJyIYnlZNm
— Pokkiri_Victor (@Pokkiri_Victor) March 18, 2026
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய், இஸ்லாமிய நண்பர்களுடன் இணைந்து தொழுகையில் பங்கேற்றார். பின்னர் நோன்பு திறந்தார்

