குழந்தைகளை எந்நாளும் பாதுகாத்து போற்றி மகிழ்வோம் - விஜய் வாழ்த்து!
Updated: Nov 14, 2024, 12:25 IST1731567326888
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அவர்களின் புன்னகை. விலைமதிப்பற்றது. குழந்தைகளின் மனது, பொறாமை, பழிவாங்குதல். ஏமாற்றுதல் போன்ற எந்த ஒரு தீய எண்ணத்தையும் கொண்டிராமல், தெளிந்த நீரைப் போல் பரிசுத்தமானது.
— TVK Vijay (@tvkvijayhq) November 14, 2024
நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட இந்தக் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம். குழந்தைகளை எந்நாளும் பாதுகாத்துப் போற்றி மகிழ்வோம் என குறிப்பிட்டுள்ளார்.