பெரியாருக்கே சாதி சாயம் பூசுகிறார்கள் - விஜய் பேச்சு
May 30, 2025, 11:02 IST1748583127642
நீட் மட்டும் தான் உலகமா? நீட்ட தாண்டி சாதிக்க பல விஷயங்கள் இருக்கு என விஜய் பேசியுள்ளார்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களை தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
மூன்று கட்டமாக நடைபெறவுள்ள இந்த கல்வி விருது விழாவில், இன்று முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்கள் பங்கேற்று உள்ளனர்.
கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியாவது; மை டியர் யங் லீடர்ஸ் & பேரன்ஸ், படிப்புல சாதிக்கணும் ஆனா ஒரே ஒரு படிப்பில் மட்டும் சாதிக்கணும்னு நினைக்காதீங்க, Stress ஆகாதீங்க. நீட் மட்டும் தான் உலகமா? நீட்ட தாண்டி சாதிக்க பல விஷயங்கள் இருக்கு . "வெயிலிலும், மழையிலும் சாதி இருக்கா?" பெரியாருக்கே சாதி சாயம் பூசுகிறார்கள், சாதி, மதத்தை ஒத்திவைக்க வேண்டும், சாதியை எவ்வளவு தூரமாக ஒதுக்க முடியுமோ ஒதுக்கி விடுங்கள் என கூறினார்.


