தவெக தலைவர் விஜய் தலைமையில் ஜனவரி 25ம் தேதி தவெக செயல் வீரர்கள் கூட்டம்..!

 
1 1

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆளும் திமுகவினர்களும், எதிர்கட்சியான அதிமுகவினர்களும் ஆட்சியை பிடிப்பதில் போட்டி போட்டிக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இந்த தேர்தலுக்கு புதிய வரவாக வந்துள்ள விஜய்யின் தவெக கட்சியும் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. விஜய் தலைமையில் ஜனவரி 25ம் தேதி தவெக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. தேர்தல் கூட்டணி, தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகளின் கீழ் தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இது குறித்து தவெக தலைமை வெளியிட்ட அறிவிப்பில், வரும் 25ஆம் தேதி (25.01.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.