மதுரை மேற்கை குறிவைக்கும் த.வெ.க. தலைவர் விஜய்?

 
vijay vijay

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகிற சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிரமாக அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் என கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்து கட்டமைப்புகளை பலப்படுத்தியுள்ள விஜய், அடுத்தகட்டமாக பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் தமிழக வெற்றி கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 

இந்த நிலையில், விஜய் வருகிற சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1980இல் எம்ஜிஆர் வென்ற தொகுதியான மதுரை மேற்கை தவெக தலைவர் விஜய் குறிவைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் கோட்டைகளில் ஒன்றான மதுரை மேற்கில் கொடிநாட்ட விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மேற்கு தொகுதியில் 1,10,000 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றி என தவெகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.  மதுரையை மையமாக வைத்து விஜயின் சுற்றுப்பயணத் திட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.