"நாங்க யாருக்கும் முந்தி விரிக்கல... எங்களை காதலிப்பவர்கள், திருமணம் செய்வதில்லை"- நாஞ்சில் சம்பத்
ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ஆனந்த் மோகனை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ரங்கம்பாளையத்தில் தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், “அதிமுக திமுக தவிர்த்து மாற்று அரசியல் வரவேண்டும் என்று மக்களுக்கு எண்ணம் இருக்கிறது. கடந்த தேர்தலில் 42 சதவீதம் மக்கள் ஈரோடு மேற்கு தொகுதியில் வாக்களிக்கவில்லை அப்பொழுது முத்துசாமி பெற்றது வெற்றியா என்பதை கேள்வியாக கேட்கிறேன்.. அதிமுக மீது ஏற்பட்ட சலிப்பு கடந்த தேர்தலில் மக்கள் தமிழ்நாடு முழுவதும் 40 சதவீதம் அளவிற்கு புறக்கணித்தார்கள். மதிமுகவை அறிவாலயத்தில் வைகோ அடக்கம் செய்து விட்டார். தேமுதிகவும் திமுகவிடம் சரண்டர் ஆகிவிட்டது. கூட்டணிக்காக நாங்கள் யாரும் முந்தி விரிக்கவில்லை. ஆனாலும் காங்கிரஸ் கூட்டணி அமைக்க முயற்சித்தது. அதையும் ஸ்டாலின் தடுத்துவிட்டார்..என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், “யுத்த காலம் ஆரம்பித்துவிட்டது. இதற்கான தலைவராக விஜய் உள்ளார். அசாதாரண அமாஷ்யமான தேர்தலாக இருக்கிறது. மாறி மாறி இரண்டு கட்சிகள் ஆட்சியில் இருந்தன, புதிய கட்சிகள் வந்தால் காணாமல் ஆக்கும் சக்தி இவர்களுக்கு உள்ளது. மக்களை நம்பி தவெக களத்தில் உள்ளது. கூட்டணி இல்லாமல் களத்தில் உள்ளோம். கூட்டணி அமைப்பதற்கான திட.டமும் எங்களிடம் இல்லை. திட.டம் இருந்திருந்தால் அதற்கான பேச்சுவார்த்தை குழு அமைத்திருப்பார். அனைத்து கட்சிகளுக்கும் தவெக.வுடன் கூட்டணி வைக்க ஒரு சலனம் இருப்பதை மறுப்பதற்கில்லை. தவெக தேர்தல் களத்தில் அழுத்தமாக காலூன்றி இருக்கிறது். 175 சாதி குழுக்களையும், கூட்டணி கட்சிகளையும் நம்பி களத்தில் திமுக உள்ளது., 10 கட்சிகளின் துணையுடன் அதிமுக உள்ளது. 36 கட்சிகளை எதிர்கொள்ளும் ஆன்ம பலம் விஜய்க்கு உள்ளது. வற்றாத ஓட்டு வங்கி இரு கட்சிகளுக்கும் உள்ளது. 45% வாக்கு வங்கி அதிமுக 19%, திமுக 35% வாக்கு வங்கி தற்பொது 20% குறைந்துள்ளது. இரு கட்சிகளின் பரமபத விளையாட்டிற்கு முடிவு ஏற்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் இரட்டிப்பு செய்து இல்லாமல் ஆக்க அவதூறு பரப்பி வருகின்றனர். முதல்வர், துணை முதல்வர், கனி மொழி பிரசார கூட்டம் சோர்வில் உள்ளது. விஜய் செல்லும் இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டம் நடத்த ஏராளமான விதிமுறைகளை விதித்து அநியாயம் செய்தனர். தேர்தல் ஆணையம் பொருப்பில் வந்த பிறகே டிஜிபி நியமிக்கப்பட்டார். மாலை நாஞ்சில் சம்பத் பேசுவதற்கான கூட்டம் ரத்து செய்துள்ளனர். சாய கழிவு நிறைந்த பகுதியில் இது குறித்து பேசுவேன் என்பதால் ஆளும் கட்சி துணையுடன் மறுத்துள்ளனர். தமிழக வெற்றிக்கழக இளைஞர்களை அரசியல் படுத்த வேண்டிய தேவை உள்ளது. தேர்தல் முடிந்த பிறகு பயிற்சி பாசறைகளை நடத்த உள்ளோம். வழக்கறிஞர்களின் கவனக்குறைவால், விஜய் வேட்பு மனுவில் பிழை நேர்ந்தது. அதற்கும் தலைவருக்கும் தொடர்பு இல்லை. அதை சரிசெய்து விட்டோம். கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எங்களை அனைவரும் காதலிக்கின்றனர், ஆனால் திருமணம் நடப்பதில்லை” என்றார்.

