அனுமதியின்றி கட்சிக்கொடி கம்பம், பெயர்ப்பலகை வைக்க முயன்ற தவெகவினர் தடுத்து நிறுத்தம்
சென்னை தண்டையார்பேட்டையில் தமிழக வெற்றிக் கழகம் பெயர் பலகை கொடிக்கம்பம் வைப்பதற்கு அனுமதி மறுப்பு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 42 வது வட்ட தலைமை பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ஆனால் மாநகராட்சி மற்றும் காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல் கொடி கம்பம் மற்றும் பெயர் பலகை திறக்கப்படுவதாக போலீசார் தடுத்து நிறுத்தினர் நல திட்ட உதவிகள் மட்டுமே வழங்கப் போவதாக காவல்துறையிடம் எழுதிக் கொடுத்து அனுமதி வாங்கி விட்டு, கொடியேற்றி பெயர் பலகை திறப்பதாக போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் தவெக தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையான அனுமதி வாங்கிய பிறகு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என போலீசார் கூறினர். உடனே போலீசாருக்கு எதிராக தவெக கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


