போராட்ட தேதியை மாற்றிய தவெக... திடீர் மனமாற்றம் ஏன்?

 
விஜய் விஜய்

சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை நடக்க இருந்த போராட்டத்தின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

vijay

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர் நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ளது.


இந்நிலையில் இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், தவெக தலைவர் உத்தரவின் பேரில், சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, நாளை (3.07.2025) அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நாளை ராஜரத்தினம் மைதானத்தில் ஆசிரியர் போராட்டம் நடைபெறுவதால், தவெக போராட்டம் வரும் 6ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.