“பேப்பர் இல்லாமல் படிக்கும் ஒரே தலைவர் விஜய்தான்! புதுச்சேரியில் ரேஷன் கடைகள் எல்லாம் மூடித்தான் கிடக்குது”- முன்னாள் எம்.எல்.ஏ. பேட்டி
பேப்பர் இல்லாமல் படிக்கும் ஒரே தலைவர் விஜய்தான் என்று தவெக மாறிய முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் பேட்டியால் சிரிப்பலை உண்டானது.

புதுச்சேரி தவெக நிர்வாகி சாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரிக்கு விஜய் வந்தார். சரியாக பேசினார். அவர் பேசியதை புரிதல் இல்லாமல் நமச்சிவாயம் கண்டனம் தெரிவித்ததை திரும்பி பெற வேண்டும். ஐந்து ஆண்டுகளாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் தரவில்லை. வாடகை தராமல் மூடப்பட்டு உள்ளன. கோதுமை போடுவதாக சொல்லி இதுவரை தரவில்லை. ஆறு மாதம் ஆச்சு. ரேஷனில் அரிசி மட்டும் தருகிறார்கள். இதர மாநிலங்களில் அத்தியாவசிய பொருட்கள் தருகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் ஏதும் தரவில்லை என்பது நமச்சிவாயத்துக்கு தெரியும். அவர் அரசியல் செய்கிறார். பெஸ்ட் புதுச்சேரி எனக்கூறி ஆட்சிக்கு வந்தனர். மத்திய அரசு உங்களுடையதுதான். நிதி வாங்கி மில் திறக்கவேண்டியதுதானே= ஐடி பார்க் ஒன்று கூட தரவில்லை. தேர்தல் அறிக்கையில் ஒரு லட்சம் பேருக்கு சொல்லிவிட்டு தெரியவில்லை. முதல்வரே ஆளுநர் மீது குறை சொல்கிறார்கள்
தீபாவளி பரிசு தொகுப்பு தர மத்திய அரசு நிதி தேவை. விஜயை பற்றி பேச நமச்சிவாயத்துக்கு இல்லை. தவெக தொண்டர்கள் நினைத்தால் மண்ணாடிப்பட்டு தொகுதியில் டெபாசிட்டை நமச்சிவாயம் இழப்பார். பெஸ்ட் புதுச்சேரிக்கு பதில் சொல்லவேண்டும். மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்தாமல் அரசியல் செய்கிறார்கள். மீண்டும் இதுபோல் பேசினால் முற்றுகையிடுவோம். நிகழ்ச்சி நடத்தும்போது அரசுக்கு நன்றி சொல்வது மரபு. போலீஸ்துறையில் அனைவரும் பணி செய்ததால் நன்றி தெரிவித்தோம். ஒரு வடநாட்டு அதிகாரி மட்டும் வேலை செய்யவில்லை. அனைவரும் செய்தார்கள். தவெக பொருத்தவரை புதுச்சேரி மாநிலத்தில் 5 ஆயிரம் கூப்பிட்டபோது, 15 ஆயிரம் பேர் வந்தனர். தாமாகவே வந்தனர். புதுச்சேரி மத்திய அரசை நம்பி இருக்கிறது. அதனால் மத்திய அரசை குற்றம் சாட்டுகிறோம். ஆட்சி, அமைச்சர்கள் மாறுவார்கள். காவல்துறை அதிகாரிகள் செயல்பட்டதால் பாராட்டுகிறோம். அமைச்சரா களத்தில் வந்து வேலை பார்த்தார். பேப்பர் இல்லாமல் படிக்கும் ஒரே தலைவர் விஜய்தான். ஒரே கூட்டத்தில் எல்லாரும் பேச முடியாது. இன்னும் நிறைய மாநாடு நடக்கவுள்ளது” என்றார்.


