தவெகவில் பதவி அறிவித்தவுடன் செங்கோட்டையன் செய்த செயல்

 
ச் ச்

தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் அண்ணா, எம்ஜிஆர் ,ஜெயலலிதா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.


அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை தமிழக வெற்றிக் கழகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் இணைந்தார். இவருக்கு அக்கட்சியின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ஈரோடு கோவை திருப்பூர் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் , சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா ,  எம்ஜிஆர் ,  ஜெயலலிதா நினைவிடங்களுக்கு கட்சித் தொண்டர்களுடன் வந்த செங்கோட்டையன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதில் செங்கோட்டையன் உடன் தமிழக வெற்றி கழகத்தின்  பொதுச் செயலாளர் என் ஆனந்த் , தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் உடன் இருந்தனர்.