“2026ல் விஜய் தலைமையில் புனித ஆட்சி அமையும்”- செங்கோட்டையன்
தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக புதியவர் வர வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது என தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
“2026ல் விஜய் தலைமையில் புனித ஆட்சி அமையும்”- செங்கோட்டையன்
சென்னை பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “விஜய் தலைமையிலான தவெகவிற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கின்றன. புரட்சித் தலைவர் மறைவுக்குப் பிறகு புரட்சித் தலைவி வழியில் நான் பயணத்தை மேற்கொண்டேன். அம்மா மறைவுக்குப் பிறகு காலச்சூழலில் பல்வேறு கூறுகளாக இந்த இயக்கம் பிரிந்தது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்தினோம்.
தமிழ்நாட்டில் தூய்மையான அரசியலை விஜய் முன்னெடுத்துள்ளார்.நான் என்று ஒருவன் நினைத்தால் தான் என்று ஆண்டவன் பார்த்துக் கொள்வான். 2026 தேர்தலில் மக்கள் புரட்சியை உருவாக்கி தவெகவிற்கு மக்கள் வெற்றியை தருவார்கள். தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக புதியவர் வர வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது. எல்லா மாநிலங்களிலும் மாற்றம் நிகழ்கிறது. தமிழ்நாட்டிலும் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். 2026ல் விஜய் தலைமையில் புனித ஆட்சி அமையும். ஜெயலலிதா ஆட்சியை புனிதமான ஆட்சி இல்லை என்று கூறவில்லை” என்றார்.


