“ஈரோட்டில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்றனர்”- செங்கோட்டையன்

 
“யார் வேண்டுமானாலும் எங்களோடு கூட்டணிக்கு வரலாம்! ஆனா ஒரு கண்டிஷன்” - செங்கோட்டையன் “யார் வேண்டுமானாலும் எங்களோடு கூட்டணிக்கு வரலாம்! ஆனா ஒரு கண்டிஷன்” - செங்கோட்டையன்

கடந்த 18ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் சுமார் மூன்று லட்சம் பேர் பங்கேற்றதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

“யார் சொல்லியும் நான் தவெகவில் இணையவில்லை”- செங்கோட்டையன்


தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே ஏ செங்கோட்டையன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , கடந்த 18ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டம் தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் புரட்சி தளபதி விஜயை காண ஏறத்தாழ சுமார் மூன்று லட்சம் பேர் கூடியதாக அவர் கூறினார். அக்கூட்டம் வரலாறு படைக்கும் கூட்டமாக அமைந்ததாகவும், அடுத்து எந்த மாவட்டத்தில் கூட்டம் நடத்த வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யப்பட உள்ளதாக அவர் கூறினார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக  கூட்டணி  நிலைபாடு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், கூட்டணியை பொறுத்தவரை அனைத்து முடிவுகளையும் கட்சித் தலைவர் விஜய் எடுப்பார் எனவும் வெற்றி பெறுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் பொங்கலுக்குப் பிறகு என்ன மாற்றம் வரப்போகிறது என்பதை நீங்கள் அனைவரும் காணப் போகிறீர்கள் என்று அவர் கூறினார். தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் வரவுள்ளதாக கூறப்படும் கருத்துக்கு பதில் அளித்த செங்கோட்டையன் விரைவில் என ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தார். தமிழக வெற்றி கழகம்  குறித்து விசிக தலைவர் திருமாவளவனின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் என்றும் அனைத்து கருத்துக்களுக்கும் பதில் அளிக்க முடியாது என்று கூறினார். மேலும் திருப்பரங்குன்றத்தில் தவெகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,  முடிந்த விஷயங்களை பற்றி பேசாமல் எதிர்காலத்தைப் பற்றி பேசுங்கள் என்று பதில் அளித்தார்.