இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் துணை நிற்பேன்- விஜய்

 
vijay vijay

இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் துணை நிற்பேன் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

Complaint filed against actor Vijay over alleged insult at Iftar gathering  | Udayavani – Latest Kannada News, Udayavani Newspaper


வக்ஃப் திருத்த சட்டப்படி எந்த புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளப்படாது என்றும், ஏற்கனவே பதியப்பட்ட வக்ஃப் சொத்துக்கள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது உச்சநீதிமன்றம். 

இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “வக்ஃப் திருத்த சட்டப்படி எந்த புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளப்படாது என்றும், ஏற்கனவே பதியப்பட்ட வக்ஃப் சொத்துக்கள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கதக்கது. இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் துணை நிற்பேன். இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.


இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய திரு. அபிஷேக் சிங்வி அவர்களுக்கும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.