நான் உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே வந்திருக்கிறேன்! நீங்கள் அனைவரும் என்னை 100% நம்பலாம்- விஜய்
கொங்கு மண்டல தங்கங்களே, திருப்பூர் பகுதி மக்களுக்கு என் அன்பு வணக்கம் என தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லுரில் பேசிய விஜய், “பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது குறித்து தவெக அரசு கனிவுடன் பரிசீலிக்கும். காவலர்களின் பணிநேரம் முறைப்படுத்தப்படும். காவலர்களின் அடிப்படை ஊதியம் ரூ.18,000ல் இருந்து ரூ.25,000ஆக உயர்த்தப்படும். அதிக பணிச்சுமை கொண்ட காவலர்களுக்கு சுழற்சி முறை விடுமுறை நடைமுறைப்படுத்தப்படும். தவி உயர்வுக்கு லஞ்சம் பெறும் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். பெண் காவலர்களுக்கு தனி ஓய்வறைகள் மற்றும் நடமாடும் கழிவறைகள் ஏற்படுத்தப்படும். நீங்கள் அனைவரும் என்னை 100% நம்பலாம். நான் உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே வந்திருக்கிறேன். ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். பொய் வாக்குறுதிகள் கொடுத்து நான் உங்களை ஏமாற்றமாட்டேன்



