மக்கள் விரோத ஆட்சி வேண்டுமா? மக்களை நேசிக்கும் விஜய் வேண்டுமா?- விஜய்

 
விஜய்

கன்னியாகுமரி மகாதானபுரம் பரப்புரையில் பல்வேறு அறிவிப்புகளை தவெக தலைவர் விஜய் வெளியிட்டார்.

அப்போது பேசிய விஜய், “தவெக ஆட்சி வந்தால், தமிழ்நாடு சேவை உரிமை சட்டமும் வெற்றி. தமிழ்நாடு சூப்பர் ஆப் உருவாக்கப்படும். அரசின் நிதி விவரங்கள் முழுமையாக வெளிப்படையாக இருக்கும். மக்கள் வாக்காளர்கள் மட்டுமல்ல, பங்காளர்கள். தமிழ்நாடு சிட்டிசன் பிரிவிலேஜ் கார்டு , வெற்றித் தமிழ்நாடு எனும் புதிய செயலி, அரசின் அனைத்து நலத்திட்டங்களும் வீட்டு வாசலுக்கே வந்து சேரும். சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) புத்தாக்க மையங்கள் அமைக்கப்படும் தமிழ்நாட்டின் கடன் ₹10.5 லட்சம் கோடியை கடந்துள்ளது. ஆவணங்களின் பெயரால் லஞ்சம் வாங்குவது, அலைக்கழிப்பதை அனுமதிக்க மாட்டோம். நலத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டாம் வீடு தேடி அரசு திட்டம் வரும். நமது அரசு அமைந்த ஆறு மாதங்களுக்குள் “வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப்'' உருவாக்கப்படும். பல சேவைகள் அந்த செயலியில் இருக்கும். 10,000 கையெழுத்துக்களுடன் மனு அளித்தால் கட்டாயம் பதில் அளிக்கப்படும். பத்து லட்சம் பேர் மனு அளித்தால் சட்டசபையில் விவாதிக்கப்படும். புதிய இணையதளத்தை உருவாக்கி அரசுக்கு முன்வைக்க உள்ள ஆலோசனைகளை வழங்கலாம்.

வட்டி செலவு என்பது நம் குழந்தைகளின் கல்வி செலவிலிருந்து திருடப்பட்டது. மக்களுக்கு சேவை செய்ய முடியாது என அரசு கூறுவதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டை AI தலைநகரமாக மாற்றுவோம்.புதிய வருவாய் வழிகளை உருவாக்கி, மக்களிடம் கூடுதல் சுமை இல்லாமல் ஆட்சி நடத்துவோம். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். இருமுனை போட்டிதான் நடைபெறும். மக்கள் விரோத ஆட்சி வேண்டுமா? மக்களை நேசிக்கும் விஜய் வேண்டுமா?” என கேள்வி எழுப்பினார்.