விசுவாசத்திற்கு விஜய் தந்த பரிசு- 30 ஆண்டுகளாக தனது கார் டிரைவராக இருந்து வரும் ராஜேந்திரனின் மகனுக்கு எம்.எல்.ஏ. சீட்
விருகம்பாக்கம் தொகுதியின் தவெக வேட்பாளராக சபரிநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தன்னிடம் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ராஜேந்திரன் என்பவரின் மகன் சபரி நாதனை விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளராக அறிவித்த தவெக தலைவர் விஜய்..
— Top Tamil News (@toptamilnews) March 29, 2026
வேட்பாளராக அறிவித்தவுடன் விஜயிடம் ஆசி பெற்ற சபரிநாதன் உணர்ச்சி பொங்க கண் கலங்கிய காட்சி#TVKVijay #Virugambakkam #Sabarinathan… pic.twitter.com/wXJjVchUyY
விருகம்பாக்கம் தொகுதியின் தவெக வேட்பாளராக சபரிநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். சபரிநாதனின் தந்தை ராஜேந்திரன், விஜய்யிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். ராஜேந்திரன் மீதான அன்பை வெளிக்காட்டும் விதமாக அவரின் மகன் சபரிநாதனுக்கு விஜய் வாய்ப்பு வழங்கியுள்ளார். மேடைக்கு தந்தையுடன் சென்று விஜய்யை சந்தித்த போது அவரது காலில் விழுந்த வேட்பாளர் சபரிநாதன் கண்கலங்கினார். விஜய் எங்கே சென்றாலும் அவருக்குப் பின்னால் ராஜேந்திரன் இருப்பதைப் பார்க்க முடியும். தனது நெருங்கிய வட்டத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே விஜய் இடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் அதில் ராஜேந்திரன் மிக முக்கியமானவர் என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.

