கொடைக்கானலுக்கு செல்லும் விஜய்! வெளியான காரணம்

 
அரசியல் கட்சி தொடங்கியது ஏன்? – விஜய் விளக்கம் அரசியல் கட்சி தொடங்கியது ஏன்? – விஜய் விளக்கம்

ஜனநாயகம் படப்பிடிப்பிற்காக கொடைக்கானலுக்கு வரும் நடிகர் விஜய் மூன்று நாட்கள் தாண்டிகுடி பகுதியில் தங்குகிறார்.

என்ன நண்பா ரெடியா..இன்று திண்டுக்கல்லுக்கு வரும் விஜய்! நோ பாலிடிக்ஸ்..  ரசிகர்களுக்கு பறந்த உத்தரவு! | Actor Vijay Visits Dindigul for  'Jananayagan' Movie Shoot at ...

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கடந்த சிலதனங்களுக்கு முன்பு கோயமுத்தூரில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கடந்த சில மாதங்களாகவே அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய் தற்போது தன்னுடைய 69ஆவது படத்தில் எச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி பகுதியில் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் விஜய் தனி விமானம் மூலம் இன்று மதியம் ஒரு மணி அளவில் மதுரை விமான நிலையத்திற்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மதுரையிலிருந்து கார் மூலமாக கொடைக்கானல் தாண்டிகுடி கிராமத்திற்கு வரக்கூடிய விஜய் தாண்டிகுடியில் உள்ள தனியார் விடுதியிலேயே தங்குகிறார்.  

அங்கிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கதவுமலை செல்லக்கூடிய பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் படபிடிப்பு நடைபெற உள்ளது இந்த படப்பிடிப்பிற்காக மூன்று நாட்கள் கொடைக்கானலில் தங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரசிகர்கள் இந்த கிராமத்தில் கூடும் பட்சத்தில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது மேலும் காவல்துறை தரப்பில் கூடுதல்  பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கின்றன.