மதுரையில் விஜய் ரோடு ஷோ நடத்தினால் நடவடிக்கை: ஆணையர்

 
vijay vijay

விமான நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சென்றபடி மக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கடந்த சிலதனங்களுக்கு முன்பு கோயமுத்தூரில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கடந்த சில மாதங்களாகவே அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய் தற்போது தன்னுடைய 69ஆவது படத்தில் எச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி பகுதியில் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் விஜய் தனி விமானம் மூலம் இன்று மதியம் ஒரு மணி அளவில் மதுரை விமான நிலையத்திற்கு வந்து, மதுரையிலிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார்.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு வரும் விஜய்,  விமான நிலையத்தில் இருந்து  சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் திறந்த வெளி வாகனத்தில் சென்றபடி மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டிருந்தார் .தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த காவல் துறையிடம் அனுமதி பெறவில்லை, மதுரையில் அனுமதியின்றி ரோடு ஷோ நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் லோகநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.